இதில் முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்தது. கேப்டன் ஹரி நிஷாந்த் (52 ரன்), விவேக் (59 ரன்) அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய சேலம் அணி 18.4 ஓவர்களில் 109 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் திண்டுக்கல் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 3-வது வெற்றியாகும்.
இன்றைய ஆட்டங்களில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் (மாலை 3.30 மணி), மதுரை பாந்தர்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.