கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: 58 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 58 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றிபெற்றது.

தினத்தந்தி

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15-வது லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி காஞ்சி வீரன்ஸ் அணியின் சார்பில் விஷால் வைத்யா மற்றும் சித்தார்த் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் விஷால் வைத்யா 2(3) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக சித்தார்த்துடன், கேப்டன் பாபா அபாராஜித் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடியில் சித்தார்த் அதிரடி காட்டி தனது அரைசதத்தினை பதிவுசெய்திருந்தநிலையில் 50(38) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய சஞ்சய் யாதவ் 14(12) ரன்களில் வெளியேறினார். பின்னர் பாபா அபராஜித்துடன், ராஜகோபால் சதீஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் தொடர்ந்து அதிரடி காட்டிய அபராஜித் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடியினர் எதிரணியினரின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடியில் ராஜகோபால் சதீஷ் 47(19) ரன்களும், பாபா அபராஜித் 76(48) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் சேர்த்தது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் சார்பில் வெங்கடேஷ் 2 விக்கெட்டுகளும், தமிழ் குமரன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் சார்பில் ஸ்ரீநிவாசன் மற்றும் கமலேஷ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் கமலேஷ் 16(7) ரன்களும், அடுத்து களமிறங்கிய கேப்டன் சுப்ரமணிய சிவா 3(6) ரன்னும், ஸ்ரீநிவாசன் 22(28) ரன்களும், வெங்கடேஷ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், அபிஷேக் 6(12) ரன்னும், சரவணன் 6(14) ரன்னும், செந்தில் நாதன் 25(17) ரன்களும், கணேஷ் மூர்த்தி 17(8) ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் எஸ்.பி. நாதன் 19(25) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. காஞ்சி வீரன்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக கவுதம் தாமரை கண்ணன் 3 விக்கெட்டுகளும், சுதீஷ் 2 விக்கெட்டுகளும், ஹரிஷ், சிலம்பரசன் மற்றும் சதீஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 58 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றிபெற்றது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்