கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி: ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் காரைக்குடி காளை அணி த்ரில் வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணி த்ரில் வெற்றிபெற்றது. #TNPL2018

தினத்தந்தி

நெல்லை,

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில், இன்று தொடங்கிய 17-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், காரைக்குடி காளை அணியும் மோதின.

டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக சஞ்சய் 28(17) ரன்கள் எடுத்தார். காரைக்குடி காளை அணியின் சார்பில் அதிகபட்சமாக மோகன் பிரசாத் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இறுதியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் காரைக்குடி காளை அணிக்கு 115 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

115 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி காளை அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்களில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதா 41(28) ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

முடிவில் மகேஷ் 13(15) ரன்களும், மோகன் பிரசாத் (0) ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் சார்பில் சுரேஷ் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் காரைக்குடி காளை அணி 19.5 ஒவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணி த்ரில் வெற்றிபெற்றது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு