கிரிக்கெட்

டி.என்.பில்.எல். கிரிக்கெட்: ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி

டி.என்.பில்.எல். கிரிக்கெட் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணிவெற்றிபெற்றது. #TNPL2018

தினத்தந்தி

நெல்லை,

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் நெல்லையில் இன்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் சார்பில் பரத் சங்கர், மணி பாரதி ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான தொடக்கத்தினை தந்த இந்த ஜோடியில், பரத் சங்கர் 29(23) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மணிபாரதி 33(29) ரன்களும், கேப்டன் பாபா அபராஜித் 17(14) ரன்னிலும் வெளியேறினர்.

அடுத்ததாக களமிறங்கிய சுரேஷ் குமார், சரவணன் ஜோடி அதிரடியில் கலக்கினர். இதில் சரவணன் 52(28) ரன்கள் எடுத்து ஆட்டத்தின் கடைசிபந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் சுரேஷ் குமார் 42(26) ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரகில் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை