கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 159/7

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 24வது லீக் ஆட்டம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இதில், டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை எடுத்துள்ளது. கவுசிக் (10), ஜெகதீசன் (9), ஸ்ரீனிவாசஸ் (7) மற்றும் சுஜய் (9) ரன்களில் ஆட்டமிழந்து உள்ளனர். ரவிஸ்ரீனிவாசன் 14 ரன்கள் மற்றும் சதீஷ் 5 ரன்கள் எடுத்திருந்தனர்.

தொடர்ந்து விளையாடிய அந்த அணியில், அதிக அளவாக சதீஷ் 64 (32 பந்துகள் 4 பவுண்டரி 4 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்து உள்ளார். ரவிஸ்ரீனிவாசன் (31), சசிதேவ் (4) ரன்களில் வெளியேறி உள்ளனர். ஹரீஷ் (15) மற்றும் சோனு யாதவ் (7) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

20 ஓவர் முடிவில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், கோவை கிங்ஸ் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்