கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேலத்திற்கு எதிராக திருச்சி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சேலம் அணிக்கு எதிரான இன்றைய டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினத்தந்தி

சென்னை,

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியுடன் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி மோதியது.

இதில் டாஸ் வென்ற திருச்சி ஆணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேலம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அக்ஷய் சீனிவாசன் மற்றும் அபிஷேக் களமிறங்கினர். அக்ஷய் சீனிவாசன் 19 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற, அபிஷேக் 14 ரன்களில் பவுல்ட் ஆனார். அடுத்து வந்த சுஷில் 11 ரன்களில் எல்.பி.டபில்யூ. முறையில் விக்கெட்டை இழந்தார்.

விஜய் சங்கர் 7 ரன்கள் எடுத்த நிலையில், மதிவண்ணன் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், அணியின் ரன்ரேட் வெகுவாக குறைந்தது. அடுத்து வந்தவர்களில் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறிய நிலையில் எம்.அஸ்வின் அதிகபட்சமாக 21 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சேலம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து 117 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சந்தோஷ் ஷிவ் 6 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற, அடுத்து வந்த நிதீஷ் ராஜகோபாலுடன் அமித் சாத்விக் ஜோடி சேர்ந்தார்.

இதில் அமித் சாத்விக் 18 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து நிதீஷ் ராஜகோபால் 22 ரன்களிலும், முகமது அத்னன் கான் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆதித்யா கணேஷ் மற்றும் அந்தோணி தாஸ் இருவரும் இறுதி வரை நிலைத்து நின்று ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

கடைசியாக 18.3 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்து திருச்சி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆதித்யா கணேஷ்(28) மற்றும் அந்தோணி தாஸ்(24) இருவரும் ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் இருந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து