image courtesy: TNPL twitter  
கிரிக்கெட்

டி.என்.பி.எல். முதலாவது தகுதிச் சுற்று: டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சு தேர்வு..!

இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

தினத்தந்தி

சேலம்,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

இந்த நிலையில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணி, கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி வெளியேறாது. மேலும் ஒரு வாய்ப்பாக 2-வது தகுதி சுற்றில் கோவை கிங்சுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு