Image Courtesy: @TNPremierLeague  
கிரிக்கெட்

டிஎன்பிஎல்: கோவை கிங்ஸ்-க்கு எதிராக டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சு தேர்வு...!

டிஎன்பிஎல் தொடரின் இறுதிகட்ட லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

டிஎன்பிஎல் தொடரின் இறுதிகட்ட லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

எஞ்சிய ஒரு பிளே ஆப் இடத்துக்கு மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் போராடி வருகின்றன. பால்சி திருச்சி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இதையடுத்து டிஎன்பிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து லைக்கா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது. 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...