Image Courtesy: @TNPremierLeague 
கிரிக்கெட்

டிஎன்பிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் இன்று மோதல்...!

நேற்று இரவு நடைபெற்ற முதல் குவாலிபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தினத்தந்தி

சேலம்,

7வது டிஎன்பிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இருந்து லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

இதில் நேற்று இரவு நடைபெற்ற முதல் குவாலிபையர் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்