கிரிக்கெட்

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

தினத்தந்தி

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நெல்லை சங்கர் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 7.15 மணிக்கு நடக்கும் 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்சை எதிர்கொள்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 5 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3-ல் கில்லீசும், 2-ல் கோவையும் வெற்றி கண்டுள்ளன.

இந்நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது