கிரிக்கெட்

ஹர்திக், கேதர் ஜாதவின் வருகையால் டோனிக்கு நெருக்கடி குறைந்துள்ளது; இந்திய கேப்டன் கோலி லண்டனில் பேட்டி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் நேற்று லண்டன் போய் சேர்ந்தனர்.

தினத்தந்தி

லண்டன்,

கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய அணியில் பேட்டிங்கில் பின்வரிசையை வலுப்படுத்த வேண்டியது அவசியமாக இருந்தது. சில ஆண்டுகளாக இந்திய அணியின் ஆட்டங்களை பார்த்தீர்களே என்றால், பின்வரிசையில் ஆடும் டோனி மீதே அதிகமான சுமை விழும். கடைசி வரிசையில் சரியான ஒத்துழைப்பு இல்லாமல் அவரால் தனது முழு திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனதும் உண்டு. ஆனால் இப்போது கேதர் ஜாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அந்த குறிப்பிட்ட பகுதியில் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். பின்வரிசையை வலுப்படுத்தி இருப்பதால் டோனிக்குரிய நெருக்கடி குறைந்துள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் கேட்டு இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறை தான் இது. இவ்வாறு கோலி கூறினார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 4ந்தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. அதற்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்து (28ந்தேதி), வங்காளதேசம் (30ந்தேதி) ஆகிய அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருக்கிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்