கிரிக்கெட்

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியா 'ஏ' க்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் ’ஏ’ பந்துவீச்சு தேர்வு

இந்தியா 'ஏ' அணியில் யுத்வீர் சிங்கிற்கு பதிலாக அசோக் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

தம்புல்லா,

இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஏ, இலங்கை-ஏ மற்றும் ஆப்கானிஸ்தான்-ஏ அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரில் இந்தியா-ஏ அணிக்கு திலக் வர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

ஏற்றத் தாழ்வான தொடக்கம்

இந்தியா-ஏ அணி தனது முதல் ஆட்டத்தில் இலங்கை-ஏ அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கியது. ஆனால், இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான்-ஏ அணியிடம் டிஎல்எஸ் முறையில் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து, 3-வது ஆட்டத்தில் இலங்கை-ஏ அணியுடன் நடைபெற்ற பரபரப்பான மோதலில் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது.

மீண்டும் ஆப்கானிஸ்தான்-ஏவுடன் மோதல்

இந்த நிலையில், தம்புல்லாவில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் இந்தியா-ஏ அணி, ஆப்கானிஸ்தான்-ஏ அணியை எதிர்கொள்கிறது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இந்தியா-ஏ அணி களமிறங்குகிறது.

டாஸ் முடிவு

இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் ’ஏ’ அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியா ’ஏ’அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்தியா 'ஏ' அணியில் வலது தோள்பட்டை காயம் காயம் காரணமாக யுத்வீர் சிங் விலகியநிலையில், அவருக்கு பதிலாக அசோக் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.