தம்புல்லா,
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-ஏ அணியின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்சி, வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா-ஏ - இலங்கை-ஏ அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை-ஏ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து இந்தியா-ஏ அணி பேட்டிங்கை தொடங்கியது.
இந்தியா-ஏ அணியின் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்சி மற்றும் பிரியான்ஷ் ஆர்யா களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். குறிப்பாக வைபவ் சூர்யவன்சி, இலங்கை பந்துவீச்சாளர்களை சிக்சர்களும் பவுண்டரிகளுமாக திணறடித்தார்.
அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்சி, வெறும் 11 பந்துகளிலேயே அதிவேக அரைசதத்தை பூர்த்தி செய்து வரலாறு படைத்தார். தொடர்ந்து சதத்தை நோக்கி அதேவேகத்தில் ஆடிய வைபவ் 29 பந்துகளில் 94 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தாார்.