கிரிக்கெட்

முத்தரப்பு ஒருநாள் தொடர் - இலங்கை ஏ அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா ஏ பேட்டிங் தேர்வு

இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா ஏ, இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பங்கேற்றுள்ளன.

தம்புள்ளை,

இலங்கையின் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்க உள்ள ஒருநாள் முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணியின் கேப்டன் திலக் வர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து இலங்கை ஏ அணி முதலில் பந்துவீச உள்ளது.

ஜூன் 21 வரை நடைபெறும் தொடர்

இலங்கையில் நடைபெறும் இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா ஏ, இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பங்கேற்றுள்ளன. ஜூன் 9 முதல் 21-ம் தேதி வரை தம்புள்ளையில் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளன.

இளம் வீரர்களின் திறமையை சோதிக்கும் முக்கிய தொடராக இது பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் தேசிய அணிக்கான தேர்வில் இந்த தொடர் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றியுடன் தொடங்குமா இந்தியா ஏ?

இளம் நட்சத்திரங்கள் நிறைந்த இந்தியா ஏ அணி, தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. அதேசமயம் சொந்த மண்ணில் விளையாடும் இலங்கை ஏ அணியும் சவால் அளிக்க தயாராக இருப்பதால், தொடக்க ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.