கிரிக்கெட்

ஒரே போட்டியில் இரு மெய்டன்கள்: ஹர்ஷல் படேல் புதிய சாதனை

ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் 2 மெய்டன் வீசிய இரண்டாவது பவுலர் என்ற சாதனையை ஹர்ஷல் படேல் படைத்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. இந்த போட்டியில் பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்களில் 2 மெய்டனுடன் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

மேலும், இதில் இரு மெய்டன் ஓவர்களும் அடங்கும். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் 2 மெய்டன் வீசிய இரண்டாவது பவுலர் என்ற சாதனையை ஹர்ஷல் படேல் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு 2020-ம் ஆண்டு பெங்களூரு அணியின் முகமது சிராஜ் இதே கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 மெய்டன் வீசியிருந்தார். தற்போது அதே அணியை சேட்ந்த ஹர்ஷல் படேல் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது