கிரிக்கெட்

யு19 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து

27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

புலவாயோ,

16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. முதல் அரையிறுதிப் போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது.

இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில் தாமஸ் ரூ பொறுப்புடன் ஆடி சதமடித்தார். இதனால் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவரில் 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.