புலவாயோ,
16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 12 அணிகள் ‘சூப்பர்6’ சுற்றுக்கு முன்னேறின. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இந்த நிலையில் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றின் கடைசி ஆட்டம் புலவாயோவில் இன்று (பிற்பகல் 1 மணி) நடக்கிறது. இதில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் (குரூப் 2) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதன் முடிவில் அரையிறுதிக்கு தகுதி பெறும் கடைசி அணி எது? என்பது தெரியவரும்.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பர்ஹான் யூசப் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.