கிரிக்கெட்

அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணியில் 4 வீரர்கள் அரைசதம்

அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய ‘ஏ’ அணியில் 4 வீரர்கள் அரைசதம் அடித்தனர்.

மவுன்ட் மாங்கானு,

இந்திய ஏ கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) மவுன்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி தொடக்க நாளில் 89.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. பிரித்வி ஷா (62 ரன்), மயங்க் அகர்வால் (65 ரன்), ஹனுமா விஹாரி (86 ரன்), விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் (79 ரன், நாட்-அவுட்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். முரளிவிஜய் 28 ரன்னிலும், கேப்டன் ரஹானே 12 ரன்னிலும் வீழ்ந்தனர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...