கிரிக்கெட்

உத்தரகாண்ட் அணி தேர்வு விவகாரம்: ஜாபருக்கு கும்பிளே ஆதரவு

உத்தரகாண்ட் அணி தேர்வு விவகாரம்: ஜாபருக்கு கும்பிளே ஆதரவு.

தினத்தந்தி

மும்பை,

உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் சமீபத்தில் அந்த பதவியை ராஜினாமா செய்தார். அணித் தேர்வில் நிர்வாகிகள் தலையீடு இருக்கிறது. தேர்வு குழுவினரும், செயலாளரும் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்று ஜாபர் குற்றம் சாட்டினார். ஆனால் வாசிம் ஜாபர் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த வீரருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் மஹிம் வர்மா புகார் கூறினார். இதை மறுத்த வாசிம் ஜாபர், வீரர்களிடம் எனது அணுகுமுறை மதரீதியாக இருந்திருந்தால் என்னை பயிற்சியாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியிருப்பார்கள் என்று பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஜாபருக்கு இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே ஆதரவு கரம் நீட்டியுள்ளார். கும்பிளே தனது டுவிட்டர் பக்கத்தில், நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்திருக்கிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக வீரர்கள் உங்களது ஆலோசனையை தவற விடுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்