கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 3-வது வெற்றி

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.

தினத்தந்தி

பெங்களூரு,

38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று நடந்த 'சி' பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-கோவா அணிகள் மோதின.

முதலில் ஆடிய தமிழக அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 373 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன் 117 ரன்னும், என். ஜெகதீசன் 168 ரன்னும் சேர்த்தனர். சாய் சுதர்சன் தொடர்ச்சியாக 2-வது சதமும், என். ஜெகதீசன் 'ஹாட்ரிக்' சதமும் விளாசினர்.

பின்னர் ஆடிய கோவா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 316 ரன்களே எடுத்தது. இதனால் தமிழக அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை