கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை: கடைசி பந்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு

பரபரப்பான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன் படி களமிறங்கிய சவுராஷ்டிர அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய விக்கெட் கீப்பர் ஜாக்சன் 134 ரன்கள் குவித்தார். முடிவில் அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. தமிழக அணி தரப்பில் விஜய்சங்கர் 4 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபா அபராஜித் அபாரமாக விளையாடி 122 ரன்கள் குவித்தார். இந்திரஜித் 50 ரன்கள், தினேஷ் கார்த்திக் 31 ரன்னும் எடுத்தனர். பின்வரிசையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி 70 ரன்கள் குவித்து அசத்தியதோடு அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் கடைசி பந்தில் தமிழக அணி இலக்கை அடைந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்