கிரிக்கெட்

விஜய் ஹசாரே தொடர்: சதமடித்த பின் ரஜினியின் ஸ்டைலை களத்தில் செய்த வெங்கடேஷ் அய்யர்

ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர் 151 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

தினத்தந்தி

ராஜ்காட்,

விஜய் ஹசாரே தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மத்திய பிரதேசம்-சண்டிகார் அணிகள் ராஜ்காட்டில் மோதின. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த மத்தியபிரதேசம் 9 விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்தது. ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர் 151 ரன்கள் (113 பந்து, 8 பவுண்டரி, 10 சிக்சர்) நொறுக்கினார். நடப்பு தொடரில் அவரது 2-வது சதமாகும்.

பின்னர் ஆடிய சண்டிகார் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 326 ரன்கள் சேர்த்து 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த அணியில் கேப்டன் மனன் வோரா (105 ரன்), அங்கித் கவுசிக் (111 ரன்) ஆகியோர் சதம் அடித்தும் பலன் இல்லை. பேட்டிங்கில் மிரட்டிய வெங்கடேஷ் அய்யர் பந்து வீசி 2 விக்கெட்டும் வீழ்த்தினார். மத்திய பிரதேச அணிக்கு இது 3-வது வெற்றியாகும்.

வெங்கடேஷ் அய்யர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினிகாந்தின் பிறந்தநாளான நேற்று அய்யர் சதத்தை எட்டியதும், இந்த சதத்தை ரஜினிக்கு அர்ப்பணிக்கும் வகையில் அவரது ஸ்டைலை களத்தில் செய்து காண்பித்து கவனத்தை ஈர்த்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை