கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார் அபிமன்யு மிதுன்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் அபிமன்யு மிதுன்.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அணிகள் மோதின. கர்நாடகா அணியைச் சேர்ந்த பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன் மூலம் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கர்நாடக வீரராகியுள்ளார் மிதுன். தமிழ்நாடு அணி பேட்டிங் செய்த இறுதி ஓவரின் போது தமிழக வீரர்கள் ஷாருக்கான்(27), முகமது(10) மற்றும் முருகன் அஸ்வின்(0) ஆகிய மூவரும் அபிமன்யுவின் பந்து வீச்சில் அடுத்தடுத்து கேட்ச் ஆகினர்.

முன்னதாக முதல் ஓவரில் முரளி விஜய்(0) மற்றும் 46-வது ஓவரில் விஜய் சங்கர்(38) ஆகியோரின் விக்கெட்டுகளையும் அபிமன்யு மிதுன் கைப்பற்றினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை