கிரிக்கெட்

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர்: தேவ்தத் படிக்கல் அடுத்தடுத்து 4 சதம் விளாசி அசத்தல்

அபார பார்மில் உள்ள தேவ்தத் படிக்கல், வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார்.

தினத்தந்தி

டெல்லி,

விஜய்ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் டெல்லியும் கர்நாடக அணிகளும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட் செய்த கர்நாடக அணியில் துவக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் சதம் விளாசினார். 102 ரன்கள் குவித்து படிக்கல் ஆட்டமிழந்தார்.

தேவ்தத் படிக்கல் தொடர்ந்து 4 சதங்கள் விளாசி வியக்க வைத்துள்ளார். ஏற்கனவே, ஒடிசா (152 ரன்கள்), கேரளா (126*) ரயில்வேஸ் (145*) அணிகளுக்கு எதிராக சதம் விளாசியிருந்தார்.

விஜய் ஹசாரே டிராபியில் 6 போட்டிகள் விளையாடியுள்ள தேவ்தத் படிக்கல் 673 ரன்கள் எடுத்துள்ளார். அபார பார்மில் உள்ள தேவ்தத் படிக்கல், வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார். பெங்களூரு அணி முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு