கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: கர்நாடகா காலிறுதிக்கு தகுதி

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

ஜெய்ப்பூர்,

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிகட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் கர்நாடகா-ராஜஸ்தான் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 41.4 ஓவர்களில் 199 ரன்னில் சுருண்டது. கேப்டன் தீபக் ஹூடா (109 ரன், 109 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) சதம் விளாசிய போதிலும் மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாததால் 200 ரன்களை கூட தாண்ட முடியாமல் போனது.

அடுத்து களம் இறங்கிய கர்நாடக அணி 43.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது. கேப்டன் ரவிகுமார் சமார்த் (54 ரன்), கே.வி.சித்தார்த் (85 ரன், நாட்-அவுட்), மனிஷ் பாண்டே (52 ரன், நாட்-அவுட்) அரைசதம் அடித்தனர்.

கால்இறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு-கர்நாடகா, உத்தரபிரதேசம்-இமாச்சலபிரதேசம் அணிகள் நாளையும், சவுராஷ்டிரா-விதர்பா, கேரளா-சர்வீசஸ் அணிகள் நாளை மறுதினமும் மோதுகின்றன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...