கிரிக்கெட்

கிரிக்கெட் பயிற்சியில் காலில் காயமடைந்த ஆல் ரவுண்டர் விஜய் சங்கர்

ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டபொழுது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதற்கான பயிற்சியில் அணி வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். இதில் ஜஸ்பிரீத் பும்ரா வீசிய யார்கர் பந்தினை இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் எதிர் கொண்டார்.

ஆனால், அது அவரது காலின் பெருவிரலில் பட்டது. இதனால் வலியில் சங்கர் துடித்துள்ளார். எனினும், கவலைப்படுவதற்கு எதுவுமில்லை என அணி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர் பேட்ஸ்மேனாக இருப்பதுடன், மிதவேக பந்து வீச்சாளராகவும் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது உள்பட 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஷிகர் தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் பரிசோதனையில் அவரது இடது கை பெருவிரலில் சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரால் 3 ஆட்டங்களில் விளையாட முடியாது என்று அணி தெரிவித்தது.

தவானுக்கு பதிலாக விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான 21 வயதான ரிஷாப் பான்ட் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஐ.சி.சி.யின் தொழில்நுட்ப கமிட்டியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

புவனேஷ்வர் குமார் காயத்தினால் 2 போட்டிகளில் விளையாட போவதில்லை. அவரால் 8 நாட்களுக்கு பந்து வீச முடியாது. பிர்மிங்காமில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் (ஜூன் 30) அவர் விளையாட வாய்ப்புள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்