கிரிக்கெட்

ஐபிஎல் - 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர்... வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி

இன்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோலி இந்த மைல்கல்லைத் தொட்டார்.

புதுடெல்லி,

2026 ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று ஒரு மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 9,000 ரன்களைக் கடந்த முதல் பேட்டர் என்ற வரலாற்று சாதனையை அவர் எட்டியுள்ளார்.

டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், தனது 11-வது ரன்னை எடுத்தபோது கோலி இந்த மைல்கல்லைத் தொட்டார். 9,000 ரன்களைக் கடந்து 'ரன் மெஷின்' என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ள விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை ஒரே அணிக்காக (RCB) விளையாடி வரும் ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே. ஐபிஎல் வரலாற்றில் கோலியைத் தவிர வேறு எந்த வீரரும் இதுவரை 8,000 ரன்களைக் கூட நெருங்கவில்லை. இவருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா (7,183 ரன்கள்) 7,000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரராக உள்ளார்.

SCROLL FOR NEXT