கிரிக்கெட்

பேட்டிங் சாதனைகள் அனைத்தையும் கோலி முறியடிப்பார்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ்

பேட்டிங் சாதனைகள் அனைத்தையும் கோலி முறியடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் அளித்த ஒரு பேட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறார். அவர் இதே போன்று தொடர்ந்து விளையாடி, உடல்தகுதியை தக்க வைத்து, தனது ஆட்டத்திறனை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளித்து செயல்படுவாரே என்றால், வருங்காலங்களில் பேட்டிங்கில் உள்ள எல்லா சாதனைகளையும் உடைத்து விடுவார் என்றார்.

சச்சின் தெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோரை ஒப்பிட்டு பேசிய வக்கார் யூனிஸ், தெண்டுல்கரை போன்று அர்ப்பணிப்புடன் விளையாடிய வீரரை பார்த்ததில்லை. எனது பந்து வீச்சை எதிர்கொண்டவர்களில் தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன் என்றார். பிரையன் லாராவிடம் இயற்கையாகவே திறமை உண்டு. தனக்குரிய நாளாக அமையும் போது எதிரணி பந்து வீச்சை துவம்சம் செய்து விடுவார் என்றும் வக்கார் யூனிஸ் கூறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்