கிரிக்கெட்

இங்கிலாந்து செல்வதை முன்னிட்டு 7 நாட்கள் தனிமையில் விராட் கோலி

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து செல்வதற்காக விராட் கோலி 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு, இந்திய கிரிக்கெட் அணி வருகிற 2 ஆம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது. இதையடுத்து அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள், கடந்த 19 ஆம் தேதி முதல் பயோ பப்புள் எனப்படும் தனிமைப்படுத்துதல் வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நேற்று முதல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவர் ஏழு நாட்கள் தனிமையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விராட் கோலியை தனது அறையிலேயே உடற்பயிற்சி செய்யுமாறு பி.சி.சி.ஐ. நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்