கிரிக்கெட்

ஐசிசி தரவரிசை: டி வில்லியர்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றார் விராட் கோலி

ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப்பட்டியலில் டி வில்லியர்ஸை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடம் பெற்றுள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் வாரியம் அவ்வப்போது கிரிக்கெட் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. இன்று காலை ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் விராட் கோலி முதலிடம் வகிக்கிறார். 862 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடம் பெற்றுள்ளார். 861 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு டி வில்லியர்ஸ் (847 புள்ளிகள்) தள்ளப்பட்டுள்ளார். ஷிகர் தவான் 746 புள்ளிகளுடன் 10 வது இடம் வகிக்கிறார்.

ஒருநாள் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் 732 புள்ளிகளுடன் நீடிக்கிறார். இரண்டாம் இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தஹீர் 718 புள்ளிகளுடன் உள்ளார். முதல் 10 இடங்களுக்குள் இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் இடம் பெறவில்லை.

டெஸ்டில் ஆதிக்கம்

டெஸ்ட் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களையும் இந்திய வீரர்களே ஆக்கிரமித்துள்ளனர். ஜடேஜா 898 புள்ளிகளுடன் முதலிடத்திலும் அஷ்வின் 865 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களுக்குள் இவர்கள் இருவரை தவிர வேறு எந்த இந்திய பந்து வீச்சாளர்களும் இடம் பெறவில்லை.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...