கிரிக்கெட்

ஆஸ்திரேலிய மண்ணில் 3 வடிவிலான போட்டியிலும் தொடரை வென்று கேப்டன் விராட்கோலி சாதனை

ஆஸ்திரேலிய மண்ணில் 3 வடிவிலான போட்டியிலும் தொடரை வென்று கேப்டன் விராட்கோலி சாதனை படைத்துள்ளார்.

தினத்தந்தி

சிட்னி,

சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 3 வடிவிலான போட்டியிலும் (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) தொடரை கைப்பற்றிய முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட்கோலி படைத்தார். இதற்கு முன்பு 2018-19-ம் ஆண்டில் விராட்கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கிலும், 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்று இருந்தது.

ஒட்டுமொத்தத்தில் இந்த சாதனையை படைத்த 2-வது கேப்டன் விராட்கோலி ஆவார். ஏற்கனவே பாப் டுபிளிஸ்சிஸ் தலைமையில் தென்ஆப்பிரிக்க அணி இத்தகைய சாதனையை ஆஸ்திரேலிய மண்ணில் படைத்து இருக்கிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை