கிரிக்கெட்

சிறந்த ஐபிஎல் 2026 அணி... விராட், ஸ்ரேயாஸ் ஐயருக்கு ’நோ’ சொன்ன சிஎஸ்கே முன்னாள் வீரர் - சூர்யவன்ஷி, கில்லுக்கு இடம்

பெங்களூரு அணி, இன்று நடைபெறும் குவாலிபையர் 1 போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது.

சென்னை,

2026 ஐபிஎல் லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான பத்ரிநாத் தனது சிறந்த 12 வீரர்கள் அடங்கிய அணியை தேர்வு செய்துள்ளார். இதில் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் இல்லாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் தேர்வு செய்துள்ள 12 வீரர்களில் 9 பேர் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்ரிநாத் தேர்வு செய்த டாப் ஆர்டர்

தொடக்க வீரர்களாக இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்வவன்சி மற்றும் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது இடத்தில் சாய் சுதர்சன், நான்காவது இடத்தில் கிளாசன் மற்றும் ஐந்தாவது இடத்தில் ரஜத் படிதார் இடம்பெற்றுள்ளனர்.

ஆல்-ரவுண்டர்கள் மற்றும் ஸ்பின்னர்கள்

ஆல்-ரவுண்டர் வரிசையில் க்ருனால் பாண்டியா மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஸ்பின் பந்துவீச்சாளராக ரஷித் கான் இடம்பிடித்துள்ளார். இந்த சீசனில் அவர் 19 விக்கெட்டுகள் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வேகப்பந்து வீச்சு

வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ககிசோ ரபாடாஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நான்காவது வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு பிரின்ஸ் யாதவ் அல்லது கார்த்திக் தியாகி ஆகியோரில் ஒருவரை பத்ரிநாத் பரிந்துரைத்துள்ளார். அதேபோல், அகீல் ஹொசைன் இம்பாக்ட் சப் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பத்ரிநாத் தேர்வு செய்த ஐபிஎல் 2026 சிறந்த அணி

வைபவ் சூர்யவன்ஷி

சுப்மன் கில்

சாய் சுதர்சன்

ஹென்ரிச் கிளாசன்

ரஜத் படிதார்

க்ருனால் பாண்டியா

சுனில் நரைன்

ரஷித் கான்

புவனேஷ்வர் குமார்

ஜோப்ரா ஆர்ச்சர்

காகிசோ ரபாடா

பிரின்ஸ் யாதவ் / கார்த்திக் தியாகி

இம்பாக்ட் சப்: அகீல் ஹொசைன்

குவாலிபையர் 1-ல் ஆர்சிபி -குஜராத் மோதல்

இதற்கிடையில், நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி, இன்று நடைபெறும் குவாலிபையர் 1 போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது. தரம்சாலா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.