கிரிக்கெட்

செல்போனை தொலைத்ததாக டுவிட்டரில் பதிவிட்ட விராட் கோலி - வைரலாகும் சொமேட்டோ நிறுவனத்தின் பதில்

விராட் கோலியின் பதிவிற்கு உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ அளித்த பதில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

மும்பை,

கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் தனது புதிய செல்போனை தொலைத்துவிட்டதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அவர், "பாக்ஸை கூட திறக்காத புதிய செல்போன் தொலைத்து போவது மிகவும் சோகமான உணர்வு. யாராவது அதை பார்த்தீர்களா?" என்று பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த பதிவிற்கு உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ பதிலளித்துள்ளது. அதில், "உங்கள் புதிய செல்போன் காணாமல் போன சோகம் மறக்க ஐஸ் கீரிம் ஆர்டர் செய்து பாருங்கள்" என சொமேட்டோ நிறுவனம் பதிவிட்டது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த பதிலை விராட் கோலியின் ரசிகர்கள் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே சமயம் மற்றொரு தரப்பினர் இது ஒரு விளம்பர யுக்தியாக இருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து