கிரிக்கெட்

போட்டிப் போட்டு செல்பி வீராட் கோலியின் மெழுகு சிலையின் காது பகுதி உடைந்தது

டெல்லி மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ள வீராட் கோலியின் மெழுகு சிலை முன் போட்டி போட்டு ரசிகர்கள் செல்பி எடுததால் காது பகுதி உடைந்தது. #ViratKohli

தினத்தந்தி

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நேற்று வைக்கப்பட்டது . டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது.

ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இப்போது விராட் கோலியும் இணைந்து உள்ளார்.

வீராட் கோலி சிலையை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். அதன் முன் நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்தனர்.

ரசிகர்களின் இந்த செயலால் வீராட் கோலியின் மெழுகு சிலையின் வலதுபக்க காது உடைந்து உள்ளது. உடனடியாக அதிகாரிகள் சிலையை அகற்றி, பழுதுபார்க்கும் பணிக்கு அனுப்பி வைத்தனர். நிலைமைக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டியிருந்தது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை