கோப்புப்படம் 
கிரிக்கெட்

இலங்கை வீரர் ஹசரங்காவுக்கு கொரோனா பாதிப்பு

இலங்கை வீரர் ஹசரங்காவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கான்பெர்ரா,

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் அவரால் விளையாட முடியாது. நடப்பு தொடரில் கொரோனாவில் சிக்கிய 3-வது இலங்கை வீரர் ஆவார். ஏற்கனவே குசல் மென்டிஸ், பினுரா பெர்னாண்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 24 வயதான ஹசரங்காவை சில தினங்களுக்கு முன்பு ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.10 கோடிக்கு பங்களூரு அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்