கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் ராஜினாமா

வாசிம் கான் கடந்த 2019ல் இசான் மணியால் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த இசான் மணியின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை புரவலரும், அந்த நாட்டின் பிரதமருமான இம்ரான் கான் விரும்பவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைவராக ரமீஸ் ராஜாவை பிரதமர் இம்ரான் கான் நியமித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் இசான் மணியால் கிரிக்கெட் அணி தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இவர் கடந்த 2019ல் இசான் மணியால் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

வாசிம் 2019லிருந்து 3 ஆண்டுகளுக்கு தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. இந்த நிலையில், தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாரியத்தின் தலைவரான ரமீஸ் ராஜா புதிய செயல் அதிகாரியை விரைவில் நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்