கிரிக்கெட்

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது

இங்கிலாந்தில் நடந்த மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி இன்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 228 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சிவர் (51) அரை சதம் கடந்துள்ளார்.

இந்திய அணியின் ஜூலான் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளும், பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளும் மற்றும் ஆர்.எஸ். கெய்க்வாட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடியது. இந்திய அணியின் பூனம் ராவத் (86) மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் (51) அரை சதம் கடந்தனர்.

இறுதியில் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 219 ரன்களே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு