கிரிக்கெட்

எங்களுக்கே சிறிது நேரத்திற்கு முன்புதான் தெரியும் - கேப்டன் மாற்றம் குறித்து சென்னை அணி சி.இ.ஓ. விளக்கம்

சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்

தினத்தந்தி

சென்னை,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் நாளை தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற கோப்பை அறிமுக விழாவில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்ற பின்பு தான் தோனி பதவியிலிருந்து விலகியது தெரியவந்தது.இந்த நிலையில் எங்களுக்கே சிறிது நேரத்திற்கு முன்புதான் தெரியும்" என கேப்டன் மாற்றம் குறித்து சென்னை அணியின் சி.இ.ஓ. விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் கூறுகையில்,

"கேப்டன்கள் சந்திப்புக்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் எங்களுக்கே இந்த விஷயம் தெரியும். இது அவருடைய முடிவு. இந்த முடிவுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். தோனி எது செய்தாலும் அது அணியின் நலனுக்காகவே இருக்கும். இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு நிச்சயம் தோனி ருதுராஜ் இடம் கலந்து பேசியிருப்பார். என தெரிவித்தார்

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து