கிரிக்கெட்

"ரசிகர்கள் முகத்தில் சிரிப்பை வரவைப்போம்" - மும்பையுடனான மோதலுக்கு முன் தினேஷ் கார்த்திக் பேச்சு

இன்று இரவு நடைபெற உள்ள ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூரு அணி மும்பையை எதிர்கொள்கிறது.

சென்னை,

தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது செயல்பாடுகளில் முழு நம்பிக்கையுடன் இருப்பதாக அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இன்று இரவு நடைபெற உள்ள ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூரு அணி மும்பையை ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த மைதானத்தில் ஆர்சிபி அணி விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.

இப்போட்டிக்கு முன்னதாக பேசிய தினேஷ் கார்த்திக், ஆர்சிபி ரசிகர்கள் முகத்தில் சிரிப்பை வரவைபோம் என்று கூறினார் அவர் கூறுகையில், "ஆர்சிபி ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமானவர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் ஈடாக, உங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என்றார்.

இரண்டு தோல்விகளுக்குப் பிறகும், சிறந்த ரன் ரேட் காரணமாக ஆர்சிபி தற்போது 3-வது இடத்தில் உள்ளது. ஆனால், இந்தப் போட்டியில் தோற்றால் முதல் 4 இடங்களுக்குள் நீடிப்பது சவாலாகிவிடும்.

மும்பை இந்தியன்ஸ் தற்போது 10 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. ஆர்சிபிக்கு எதிரான இந்தப் போட்டியில் மும்பை தோற்றால், இந்த சீசனில் அதிகாரபூர்வமாக வெளியேறும் முதல் அணியாக மும்பை மாறும். எனவே இது அவர்களுக்கு 'வாழ்வா-சாவா' போராட்டமாகும்.