கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி அறிவிப்பு

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிங்ஸ்டன்,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணியில் ஆல்-ரவுண்டர் சுனில் நரின், ஜாசன் ஹோல்டர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆச்சரியம் அளிக்கும் வகையில் 36 வயது வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்பால் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். அவர் கடைசியாக 2015-ம் ஆண்டில் அணியில் இடம் பிடித்து இருந்தார். ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் 20 ஓவர் போட்டியில் முதல்முறையாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். மாற்று வீரர்களாக ஜாசன் ஹோல்டர், அகில் ஹூசைன், ஷெல்டன் காட்ரெல், டேரன் பிராவோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பொல்லார்ட் தலைமையிலான 15 பேர் கொண்ட வெஸ்ட்இண்டீஸ் அணி வருமாறு:-

பொல்லார்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன், பாபியன் ஆலன், வெய்ன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஆந்த்ரே பிளட்செர், கிறிஸ் கெய்ல், ஷிம்ரன் ஹெட்மயர், இவின் லீவிஸ், ஒபெட் மெக்காய், ரவி ராம்பால், ஆந்த்ரே ரஸ்செல், சிம்மன்ஸ், ஒஷானே தாமஸ், ஹைடன் வால்ஷ் ஜூனியர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை