கிரிக்கெட்

டோனிக்கு வெஸ்ட்இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டோனிக்கு, வெஸ்ட்இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கலோனலாக பணியாற்றி வருகிறார். வெஸ்ட்இண்டீஸ் தொடரில் இருந்து விலகி இருக்கும் டோனி தற்போது ராணுவ வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். டோனி ராணுவ பணியில் ஈடுபாடு காட்டி வருவதை வெஸ்ட்இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், கிரிக்கெட் களத்தில் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியவர் டோனி. அத்துடன் தேசப்பற்று கொண்டவரான அவர் ராணுவத்தில் பணியாற்றுவது பெருமைக்குரிய விஷயமாகும். ஜமைக்காவில் அனைவரிடமும் டோனி பற்றி எடுத்து கூறுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஷெல்டன் காட்ரெல் ஜமைக்கா ராணுவத்தில் பணியாற்றியவர். அவர் ஒவ்வொரு முறையும் விக்கெட் வீழ்த்தும் போதும் மைதானத்தில் ராணுவ வீரர் போல் சல்யூட் அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்