கிரிக்கெட்

இந்திய அணி வீரர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் - வைரலாகும் வீடியோ

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய வீரர்களை சந்திந்து பேசினார்

தினத்தந்தி

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்களின் அறையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய வீரர்களை சந்திந்து பேசினார். இதனை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. வீடியோவில் லாராவுடன் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பிற வீரர்கள் பேசுவது காண முடிந்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்