கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 2-ம் நாள் ஆட்டநேரமுடிவில் வெஸ்ட் இண்டீஸ் 232/8

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்துள்ளது.

தினத்தந்தி

கிரேனடா,

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 டெஸ்ட்கள் டிராவில் முடிந்துள்ளன. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரேனடாவில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சகீப் முகமது அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் பிராத்வெயிட் 17 ரன்னிலும், ஜான் ஜப்பெல் 35 ரன்னிலும் வெளியேறினர். அடுத்துவந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

இதனால், 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் சில்வா 54 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை விட 28 ரன்கள் உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்