Image Courtesy: @ICC 
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு...!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடரில் முதலாவதாக டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.

அதில் முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 12ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ரோகித் சர்மா தலைமையிலும், டி 20 அணி ஹர்த்திக் பாண்டியா தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் டெஸ்ட் அணியில் கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சொதப்பிய புஜாரா அதிரடியாக கழற்றிவிடப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு க்ரேய்க் ப்ராத்வெய்ட் தலைமை தாங்குகிறார்.

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:-

கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கென்சி, ரேமன் ரெய்ஃபர், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன்

பயண இருப்புக்கள்: டெவின் இம்லாச், அகீம் ஜோர்டான்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை