image courtesy; twitter/ @ICC  
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வெற்றி...டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறும்.

தினத்தந்தி

துபாய்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. அதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த பட்டியலில் ஏற்கனவே 56.25% புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி சில புள்ளிகளை இழந்துள்ளது. இருப்பினும் அந்த அணி 55 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி கூடுதல் புள்ளிகள் பெற்று 1 இடம் முன்னேறி 7-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து ஒரு இடம் சரிந்து 8-வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது.

அந்த பட்டியல்;-

1. ஆஸ்திரேலியா - 55.00%

2.இந்தியா - 54.16%

3. தென் ஆப்பிரிக்கா-50.00%

4. நியூசிலாந்து - 50.00%

5.வங்காளதேசம் -50.00%

6.பாகிஸ்தான் - 36.66%

7.வெஸ்ட் இண்டீஸ் - 33.33%

8. இங்கிலாந்து - 15.00%

9. இலங்கை- 0.00%

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்