கிரிக்கெட்

கொரோனா பாதிப்பு: ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு

டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பார்படாஸ்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் முதலில் நடைபெற்றது. இதில் 4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், 2- வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது. போட்டி தொடங்குவதற்காக டாஸ் போடப்பட்டது. ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக போட்டி தொடங்குவது நிறுத்தப்பட்டது. வீரர்கள் அனைவரும் ஓட்டல் அறைக்க்கு திரும்ப அனுப்பப்பட்டனர். அனைத்து வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதன் முடிவுகளின் அடிப்படையில் 2-வது ஒருநாள் போட்டி எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது