image courtesy: twitter/@JayShah  
கிரிக்கெட்

கம்பீரிடம் அப்படி சொல்வதற்கு நான் யார்..? - ஜெய்ஷா பேட்டி

கம்பீர் 3 வகையான இந்திய அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்ததாக ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற கவுதம் கம்பீரின் பயணம் கடந்த இலங்கை தொடருடன் ஆரம்பமானது. இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் சோதனை எதிர்வரும் வங்காளதேசத்திற்கு எதிரான தொடரிலிருந்துதான் ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற கவுதம் கம்பீர் 3 வகையான இந்திய அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்ததாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். எனவே அவரது விருப்பத்தை தாண்டி குறிப்பிட்ட பார்மட்டில் மட்டும் பயிற்சியாளராக செயல்படுங்கள் என்று தாம் கட்டளையிட முடியாது என்றும் ஜெய்ஷா கூறியுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள புதிய பயிற்சியாளரின் கருத்துகளை கேட்கிறோம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுதம் கம்பீர் 3 வகையான கிரிக்கெட்டிலும் பயிற்சியாளராக செயல்படுவதில் ஆர்வமாக இருக்கிறார். எனவே நீங்கள் குறிப்பிட்ட பார்மட்டில் மட்டும் பயிற்சியாளராக செயல்படுங்கள் என்று அவரிடம் சொல்வதற்கு நான் யார்?. அது ஒரு புறமிருக்க நமது 70 சதவீத வீரர்கள் ஒரே நேரத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார்கள்" என்று கூறினார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை