கிரிக்கெட்

ஸ்டெயினுக்கு பிடித்த பேட்ஸ்மேன்கள் யார்?

ஸ்டெயின், தனக்கு பிடித்த பேட்ஸ்மேன்கள் யார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஜோகனஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினை ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.2 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வாங்கியுள்ளது. இதனால் உற்சாகத்தில் உள்ள 36 வயதான ஸ்டெயினிடம், ரசிகர்கள் டுவிட்டர் மூலம் சில கேள்விகள் கேட்டனர். அவரிடம், உலக கிரிக்கெட் அரங்கில் தற்போது உங்களுக்கு பிடித்த பேட்ஸ்மேன்கள் யார் என்ற கேள்விக்கு, தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், குயின்டான் டி காக், இந்தியாவின் விராட் கோலி ஆகியோர் தனக்கு பிடித்தமானவர்கள் என்று பதில் அளித்தார். தற்போது உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக யாரை அடையாளம் காட்டுவீர்கள் என்ற போது, ஆஸ்திரேலிய பவுலர் பேட் கம்மின்சின் பெயரை கூறினார்.

மீண்டும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு திரும்புவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பரவசமூட்டுகிறது என்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போது மிகச்சிறந்த பந்து வீச்சு தாக்குதலை கொண்டுள்ள அணி எது என்ற கேள்விக்கு இந்தியா என்று குறிப்பிட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து