கிரிக்கெட்

டோனி, பிளிஸ்சிஸ் ஆகியோரில் வசீகரமானவர் யார்? - இம்ரான் தாஹிர் பதில்

டோனி, பிளிஸ்சிஸ் ஆகியோரில் வசீகரமானவர் யார் என்பது குறித்து இம்ரான் தாஹிர் பதில் அளித்துள்ளார்.

* கிரிக்கெட்டில் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றதை தவிர்த்து எனக்கு பிடித்தமான ஆட்டம் எதுவென்றால் 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை தொடரின் சூப்பர்-10 சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தான் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். மொகாலியில் நடந்த அந்த ஆட்டத்தில் கோலி 82 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

* கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஆக்கி சம்மேளனத்தின் வருடாந்திர கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவர் இந்தியாவின் நரிந்தர் பாத்ரா உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

* வெளிநாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிகளில் பங்கேற்க இந்திய வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னாள் வீரர்கள் இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென்ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிரிடம், டோனி, பிளிஸ்சிஸ் ஆகியோரில் வசீகரமானவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், இது கடினமான கேள்வி இருவருமே பதற்றம் இல்லாமல் சாதுர்யமாக செயல்படக் கூடியவர்கள் என்றார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு