ஆமதாபாத்,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கி யது. இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 20 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் சூப்பர்8 சுற்று முடிவில் தென்ஆப் பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியை எட்டின. முத லாவது அரையிறுதியில் நியூசிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை பந்தாடி 2-வது தடவையா கவும், இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையா கவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர் ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் குஜராத் மாநிலம் ஆமதாபாத் தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மோதுகின்றன.
இறுதியுத்தத்தை காண, ஆமதாபாத் மைதானத்தில் கிட்டத்தட்ட 1 லட்சம் ரசிகர்கள் திரளுவார்கள். உள்ளூர் ரசிகர்களின் ஆர்பரிப்புக்கு மத்தியில் களம் காணும் இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றி சரித்திரம் படைக்குமா? அல்லது நியூசிலாந்து அணி முதல்முறையாக உலகக்கோப்பையை கையில் ஏந்துமா? என்பதே கிரிக்கெட் உலகின் ஒரே எதிர்பார்ப்பாகும்.
மொத்தத்தில் இது போன்ற ஆட்டத்தில் இரு அணிக்குமே உச்சபட்ச நெருக்கடி இருக்கும். எனவே அழுத்தமான சூழலை எந்த அணி சாதுர்ய மாக சமாளிக்கிறதோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு சற்று தூக்கலாக இருக்கும்.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.